10ஆண்டுகளாக தொடரும் சாலை பிரச்சனை: குமரியில் மக்கள் அவதி

10ஆண்டுகளாக தொடரும் சாலை பிரச்சனை: குமரியில் மக்கள் அவதி
X
சாலை பிரச்சனையில் எதாவது ஒரு முடிவுக்கு வாங்க சார் என குமரி மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவதுமாக முடிவடையாத நிலையில் 10ஆண்டுகளாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த சாலைகளில் புதிய தார் சாலைகள் அமைக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே நாகர்கோவிலில் புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டி அதிவேக இன்டர்நெட் கேபிள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிடாமல் நல்லா இருக்கும் ரோடு மேல திரும்ப ரோடு போடுறாங்க, இன்னொரு பக்கம் போட்ட ரோடு மேல மீண்டும் குழி தோண்டுகிறார்கள். இது என்ன லாஜிக்ன்னு மட்டும் தெரியவில்லை என ஆதங்கத்தை தெரிவிக்கும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கலந்தாலோசிக்க மாட்டீர்களா ஆபீசர் சார், ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க சார் என்று கூறுகின்றனர்.

Tags

Next Story