பெரும் கூட்டத்தால் பெருந்தொற்று ஏற்படும் அபாயம் - திட்டமிடல் அவசியம்
கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் கூடிய கூட்டத்தால் பெருந்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமைக்கப்பட்டிருந்த மனு பெட்டியில் மட்டுமே போட அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதலே மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடினர்.
மேலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமான நிலையில் சரியான திட்டமிடல் இல்லாததால் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அனைவரும் கூட்டமாக கூடி நின்றதோடு முகக் கவசம் அணியாமல் நின்றனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது, அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களை கண்டுகொள்ளாததால் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகள் காற்றில் பறந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu