நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை

கன்னியாகுமரி – புனே ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டு நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை
கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த ஜெயந்தி ஜனதா ரயில் கொரோனாவுக்கு பிறகு தனது சேவை மீண்டும் தொடங்கும் போது மும்பைக்கு பதிலாக புனே என்று இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு பிறகு மற்ற ரயில்கள் எல்லாம் தனது சேவையை தொடங்கி ஒரு வருடங்கள் ஆகியும் குமரி மாவட்ட பயணிகள் பயணம் செய்யாத காரணத்தால் இந்த ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் யாருமே கோரிக்கை வைக்கவில்லை.
இது மட்டுமல்லாமல் இந்த ரயிலை புனேவுடன் நிறுத்தி விட்டது கூட யாருமே கண்டுகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து புனேவுக்கு தற்போது வாரத்திற்கு ஆறு நாட்கள் ரயில் சேவை திருநெல்வேலி, மதுரை வழியாக உள்ளது.
தற்போது புனேவுக்கு இயக்கப்பட்டு வரும் ரயில்கள் விபரம்.
நாகர்கோவில் - மும்பை ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்கும் போது பயண நேரம் இன்னும் கணிசமான அளவில் குறையும். இவ்வாறு இயக்கப்பட்டு வரும் மூன்று ரயில்களில் கன்னியாகுமரி – புனே ஜெயந்தி ஜனதா ரயில் அதிக தூரம் கொண்டு பயண நேரமும் அதிகம் இருப்பதால் குமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்வது கிடையாது.
ஆனால் இந்த ரயில் காலை நேரத்தில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் கொல்லம் வழியாக பயணிப்பதால் கேரளாவுக்கு தினசரி பயணம் செய்யும் குறைந்த அளவு தூரம் கொண்ட இடங்களுக்கு பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். குமரி மாவட்டத்திலிருந்து மும்பை செல்லும் பயணிகள் இங்கிருந்து பேருந்துகளில் அல்லது ரயிலில் திருவனந்தபுரம் சென்று விட்டு அங்கிருந்து கொங்கன் பாதையில் மும்பை செல்லும் ரயில் நேத்ராவதி ரயிலில்தான் மும்பைக்கு செல்கின்றனர்.
இந்த ரயிலில் குமரி மாவட்ட பயணிகள் பயணம் செய்யாமல் இருக்கின்ற காரணத்தால் ஏன் இந்த ரயிலை மீண்டும் இயக்குகிறார்கள் என்று அனைவருக்கும் சந்தேகம் தோன்றும். வேறு ஒன்றும் இல்லை யாரும் கேட்காமலே இந்த ரயிலை இயக்குகிறார்கள் என்றால் இதன்பின் ஓர் சூட்சுமம் அடங்கியுள்ளது. கேரளா பயணிகளுக்கு வேண்டி இங்கு நமது ரயில் நிலையம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பிட்லைன் கழுவி பராமரிப்பு செய்து தண்ணீர் பிடித்துவிட்டு இங்கிருந்து ரயில்கள் இயக்குகிறோம் என்று விளம்பரப்படுத்தி கேரளா பயணிகள் நலனுக்காக வேண்டி இந்த ரயில் இயக்கப்படுகின்றது.
இந்த கன்னியாகுமரி – புனே ரயில் மதியம் 12:30 மணிக்கு கன்னியாகுமரி விட்டுவிட்டு எட்டு மணி நேர பிட்லைன் பராமரிப்பு பணிகள் முடிந்து அடுத்த நாள் காலையில் 8:25 மணிக்குதான் புறப்பட்டு செல்கிறது. இதுவரை இந்த ரயிலின் காலி ரயில் பெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலியாக ஒரு ஸ்டேபிள் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தினசரி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு செய்யப்படுகின்ற காரணத்தால் பிட்லைன் பராமரிப்பு உள்ள வேறு ரயில்கள் இயக்க முடியாமல் இட நெருக்கடி ஏற்படுகிறது. இவ்வாறு இடநெருக்கடி ஏற்படுவதால் கன்னியாகுமரியிலிருந்து ஐதராபாத் தினசரி ரயில், புதுடெல்லி தினசரி ரயில், ஹவுரா தினசரி ரயில் போன்ற நெடுந்தூர ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை உள்ள ஒரு வழிப்பாதையில் இந்த ரயில் டிராக் அதிக இட நெருக்கடி ஏற்படுகிறது. இவ்வாறு இடநெருக்கடி ஏற்படுவதால் திருவனந்தபுரம் - மங்களூர் ரயிலை கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்ய முடியாத நிலை உள்ளது.
ஒரு ரயில் நிலையத்திற்கு புதிய ரயில்கள் நிறுத்தம் வேண்டும் என்றால் தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களில் 500 கி.மீக்கு மேல் 40 பயணச்சீட்டுகள் சராசரியாக விற்பனையனால் மட்டுமே புதிய ரயில் நிறுத்தம் அனுமதிக்கப்படும். இந்த கன்னியாகுமரி – புனே ரயிலில் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையத்தில் 500 கி.மீக்கு மேல் ஒரு பயண சீட்டு கூட விற்பனை இருக்காது. இதன்படி இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையத்தில் புதிய நிறுத்தங்கள் கோரிக்கை வைத்தால் இந்த ரயிலில் 500 கி.மீக்கு மேல் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை சராசரி கணக்கிடும் போது 40 பயண சீட்டுகள் விற்பனை இருக்காது. இதனால் திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடைக்காமல் போய்விடுகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து கொங்கன் பாதையில் மும்பை செல்லும் நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய திருவனந்தபுரம் - கன்னியாகுமரி ஒருவழிப்பாதையாக இருக்கின்ற காரணத்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இந்த கன்னியாகுமரி – புனே ஜெயந்தி ஜனதா தினசரி ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இவ்வாறு செய்யும் போது குமரி மாவட்ட பயணிகள் கொங்கன் பாதையில் வெகு விரைவில் எந்த காலதாமதமின்றி மும்பைக்கு பயணம் செய்ய முடியும். நேத்ராவதி ரயில் தற்போது திருவனந்தபுரத்திலிருந்து தற்போது 9:15 மணிக்கு புறப்பட்டு மறுமார்க்கமாக திருவனந்தபுரத்துக்கு 18:05 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரயிலை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் தினசரி கேரளாவுக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகளுக்கு காலை மற்றும் மாலை என இரு மார்க்கங்களிலும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது நாகர்கோவிலில் பிட்லைன் பராமரிப்பு செய்துவந்த கன்னியாகுமரி – புனே ரயில் திருவனந்தபுரத்தில் பிட்லைன் பராமரிப்பு பணிகள் செய்து, திருவனந்தபுரத்தில் பிட்லைன் பராமரிப்பு செய்து வரும் நேத்ராவதி ரயில் நாகர்கோவிலில் பராமரிப்பு செய்து இந்த ரயிலை எளிதாக நீட்டிப்பு செய்து இயக்க முடியும் என்ற ஆலோசனையும் ரயில்வே துறையிடம் வைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் நாகர்கோவிலில் இடநெருக்கடி பிரச்சனையும் இருக்காது, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி பாதையில் எந்த இடநெருக்கடியில் கூடுதலாக உருவாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu