வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்
X

திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துமதி வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

அதன்படி குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியதில் தோவாளை தாலுக்காவிற்கு உட்பட்ட திருப்பதிசாரம், நாஞ்சில் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக தண்ணீரில் தத்தளித்தன.

இந்நிலையில் கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த திருப்பதிசாரம், நாஞ்சில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் என ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருப்பதிசாரம் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துமதி வழங்கினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!