குமரியில் வீட்டில் தஞ்சமடைந்த அரிய வகை வெள்ளைநிற ஆந்தை

குமரியில் வீட்டில் தஞ்சமடைந்த அரிய வகை வெள்ளைநிற ஆந்தை
X

வெட்டுர்ணிமடம் கிருஸ்து நகர் பகுதியில் சிக்கிய அரியவகை ஆந்தை

குமரியில் வீட்டில் தஞ்சமடைந்த அரிய வகை வெள்ளை நிற ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் கிருஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், இவரது வீட்டில் இன்று காலை அரியவகை வெள்ளை ஆந்தை ஒன்று பறந்து வந்து தஞ்சமடைந்து இருந்தது.

இதனை கண்ட ராஜேஷ் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார், அதன் பேரில் சம்பவ இடம் வந்த வனத்துறையினர் அரியவகை வெள்ளை ஆந்தையை லாவகமாக பிடித்து சென்றனர்.

வழக்கமாக உள்ள ஆந்தைகளை விட இந்த வெள்ளை ஆந்தை மிகவும் அபூர்வமாகவே காணப்பட்டது, இதனை தொடர்ந்து ஆந்தையை வனத்துறையினர் நாகர்கோவில் உள்ள தலைமை வனத்துறை அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags

Next Story
மத்தியபிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை..!