/* */

மழையால் குளிர்ந்தது குமரி- பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மழையால் குளிர்ந்தது குமரி- பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கன மழைக்கு பின்னர் கடும் வெயிலானது பொது மக்களை வாட்டி வதைத்து வந்தது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு இருந்து வந்த வெயிலின் காரணமாக பொதுமக்களும், வாகன ஒட்டிகளும், மாணவ மாணவிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உட்பட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, தற்போது பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக கடும் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் விவசாயமும் விவசாயிகளும் பாதிப்பை சந்தித்து வந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெய்து வரும் கனமழையால் விவசாயம் செழிப்பதோடு குடிநீர் தேவையும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 7 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்