பதவியேற்ற கையோடு அதிரடி காட்டிய பாஜக கவுன்சிலர் - பொதுமக்கள் பாராட்டு
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 12 ஆவது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுனில்குமாரும் கவுன்சிலராக பதவியேற்று கொண்டார். ஆனால் மற்ற பெரும்பாலான கவுன்சிலர்கள் பதவியேற்றதை நண்பர்கள் உறவினர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வார்டுக்கு நேரடியாக சென்ற சுனில் குமார் பிரச்சாரத்தின் போது மக்கள் முன் வைத்த முக்கிய பிரச்சனையான ரேஷன்கடை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வார்டுக்கு உட்பட்ட கொம்மண்டைஅம்மன் கோவில் பகுதி நியாய விலை கடையை நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் ரேஷன் கடை ஊழியரிடமும் அன்பாக நடந்து கொண்டார், மேலும் கடையில் தரமில்லாத பொருட்கள் வந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறும் கேட்டு கொண்டார். இரு பெரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பலமுறை கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாம்பவங்களை வீழ்த்தி முதல் வாய்ப்பிலேயே வெற்றி பெற்றதோடு வெற்றி பெற்ற கையோடு பொதுமக்கள் சந்திப்பு, மக்கள் பிரச்சனைக்காக 24 மணி நேர தொலைபேசி வசதி, ஆய்வு என வார்டில் கலக்கி வரும் சுனில் குமார் மக்கள் கவனத்தை ஈர்த்து இருப்பது கவுன்சிலர்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu