நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு
X
நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தை கடைகளுக்கு வரும் 08/09/202 காலை 11:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறும் என் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன் படி கரியமாணிக்கப்புரம் குளக்கரை எதிரே அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நடத்துவதற்கு ஏதுவான பெதஸ்தா வணிக வளாகம் ஆகியவற்றிற்கு பொது ஏலம் நடைபெறுகிறது.

மேலும் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் டிக்கெட் முன்பதிவு அறைகள் 1, 2, 20, 24, 25 ஆகியவை.

பெதஸ்தா வணிக வளாகம் கடைகள் 19, மற்றும் 20,

இளங்கடை இறைச்சிக் கடைகள் 3, 4, 5, 6,

கரியமாணிக்கபுரம் கடைகள் 3, 4, 5, 8,

வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் கடைகள் 1, 2,

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் 2, 4, (phase 1), 15, 16 (phase 2),

சரலூர் மீன் சந்தை கடை எண் 15,

போன்றவற்றிற்கு பொது ஏலம் நடைபெறுகிறது. மேலும் தேவையான விபரங்களை மாநகராட்சி வருவாய் பிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!