நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு நாளை பொதுஏலம்

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு நாளை பொதுஏலம்
X
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு நாளை பொதுஏலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில் மாநகர இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், வர்த்தக நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான கீழ்க்கண்ட விபரம் படியான கடைகளுக்கு நாளை (01/09/2021) புதன்கிழமை பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளன.

அதன்படி,

1) பெதஸ்தா வணிக வளாகம், கடை எண்: 19,20 & 47

2) வடசேரி ஆம்னி பேருந்து நிலைய டிக்கெட் முன்பதிவு அறை, 1,2,20,23,24,25

3) வடசேரி பேருந்து நிலையம், கடை எண்: 2,4,5 (phase1), கடை எண்: 15 & 16 (phase2)

4) கரிய மாணிக்கபுரம் கடை, கடை எண்: 3,4,5,8

5) இளங்கடை இறைச்சிக்கடை, கடை எண்: 3,4,5,6

6) சரலூர் மீன் சந்தை, கடை எண்:15

7) அண்ணா பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை 9 நபர்கள்.

ஆண்டு குத்தகை இனங்கள்

1) சரலூர் மீன்/காய்கறி சந்தையில் கட்டணம் வசூல் செய்யும் உரிமை.

2) வடசேரி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை.

3) வடசேரி பேருந்து நிலைய கழிவறை கட்டணம் வசூல் செய்யும் உரிமம்.

4) அண்ணா பேருந்து நிலைய கழிவறை கட்டணம் வசூல் செய்யும் உரிமம்.

5) கோட்டார் பாரவுந்து நிலைய கட்டண வசூல் செய்யும் உரிமம்.

6) முதலியார்விளை கார் நிலையத்தில் கட்டண வசூல் செய்யும் உரிமை.

7) வடசேரி சந்தையில் உள்ள 108 கடைகள் மற்றும் வருங்காலத்தில் ஒப்படைக்கப்படும் கடைகளில் கட்டண வசூல் செய்யும் உரிமம்.

மேலும் கடைகளுக்கு செலுத்த வேண்டிய வைப்புத் தொகை மற்றும் இதர விபரங்களை மாநகராட்சி வருவாய் பிரிவில் நேரில் சென்று கேட்டு தெரிந்து கொள்ளவும், மேலும் விபரங்கள் பெற 8870733293, 8870435783 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!