வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நாகர்கோவிலில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கொள்கை வேண்டும் என கூறி, குமரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நாகர்கோவிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு கொள்கையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு அதனை அமல்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வேண்டும், என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!