பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா : பாஜகவினர் யாகம் செய்து வழிபட்டனர்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா : பாஜகவினர் யாகம் செய்து வழிபட்டனர்
X

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு  பிஜேபியினர் சார்பாக நடைபெற்றது.

பிரதமரின் மோடியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி கோவில்களில் பாஜகவினர் யாகத்துடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

பாரத பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள செட்டி தெரு பிள்ளையார் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

மேலும் பாரத பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக கோ பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது, தொடர்ந்து ஆடை தானம் வழங்கிய பாஜகவினர் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!