நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு

நாகர்கோவிலில் மார்ச் 23 ஆம் தேதி மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு
X
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவில் பகுதிகளில், வரும் 23 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மின் வினியோக பகுதிகளுக்கு உட்பட்ட வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் 23 ஆம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதே போன்று நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிநகர், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையார்விளை, காரவிளை, தாராவிளை, வைராகுடி, பருத்திவிளை போன்ற பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதே நாளில் எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடார்குடி ஆகிய பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 23-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக நாகர்கோவில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!