'பல் இளிக்கும்' சாலை : விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கவலை

பல் இளிக்கும் சாலை : விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் கவலை
X

 நாகர்கோவில் மாநகராட்சியில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள். 

நாகர்கோவிலில், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் விபத்து அபாயம் உள்ளது; அவற்றை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டு, பல ஆண்டுகளாக முடிவு பெறாமல் ஜவ்வாக நீண்டு வருகின்றது. பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு, சரியாக மூடப்படாமலும், பல்வேறு பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே காணப்படுவதால் மாநகர் பகுதியில் சுமார் 60 சதவீத சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகின்றது.

மழை நேரங்களில், குண்டும் குழியுமான இருக்கும் சாலைகளால் மாநகரப்பகுதிகளில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகின்றது. மேலும் பள்ளங்களில் விழாமல் இருக்க வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாகர்கோவில் மாநகர பகுதியில், பாதாள சாக்கடை பணிகள் முடிவு பெற்றும் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை உடனடியாக சீர் செய்து புதிய சாலைகள் அமைக்க, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!