குமரியில் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி: நடவடிக்கை எடுக்க கலைஞர்கள் கோரிக்கை

குமரியில் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி: நடவடிக்கை எடுக்க கலைஞர்கள் கோரிக்கை
X

நாகர்கோவிலில் மேடை மெல்லிசை கலைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

குமரியில் 10 வருடமாக காணாமல் போன ஆபாச நடன ஆடல் பாடல் மீண்டும் தலை தூக்குவதால் நடவடிக்கை எடுக்க கலைஞர்கள் கோரிக்கை.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் பெரும்பாலான விழாக்களில் அரைகுறை ஆடை, ஆபாசத்துடன் கூடிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இது தமிழக பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்கும் என்பதோடு இந்த நிகழ்ச்சி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.

இதன் காரணமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி காணாமல் போனத்தோடு கலாச்சார நடனங்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலைகள், மெல்லிசை நிகழ்ச்சிகள் பெருமை பெற்றதோடு அதனை நம்பி வாழும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் முன்னேறியது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கிராமிய, கலாச்சார மற்றும் பாரம்பரிய கலைகள் இடம் பெற்று இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆபாச நடனத்துடன் கூடிய ஆடல் பாடல் களைகட்ட தொடங்கி உள்ளது. மேலும் ஆபாச நடனதுடன் கூடிய ஆடல் பாடல் நிகழ்ச்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் கிராமிய கலைஞர்கள், மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாக ஆகி போனது.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனிடையே மேடை மெல்லிசை கலைஞர்கள் கூறும் போது, தற்போது தலை தூக்க தொடங்கி உள்ள ஆபாச நடன ஆடல் பாடல் நிகழ்ச்சியால் தங்களின் தொழிலுக்கும் தங்களுக்கும் அவப்பெயர் உருவாகி வருவதாகவும், முன்பு இருந்த மரியாதை தற்போது கடுகளவும் இல்லாத நிலையில் ஆபாச நடன கலைஞர்களை போலவே தங்களையும் பார்ப்பதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் எத்தனை பீஸ் களை அழைத்து வருவீர்கள் என கேட்பதாகவும், பெண்களை பீஸ் என்று அழைக்கும் நிலைக்கு இந்த ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சி தள்ளி உள்ளதாகவும் இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதோடு பண்பாடும் காணாமல் போவதாக தெரிவித்தனர்.

ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் 30 க்கும் குறைவான கலைஞர்களே இருக்கும் நிலையில் இவர்களால் தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான கலைஞர்களின் வாழ்வாதாரம் பரி போயிருப்பதாகவும் கவலை தெரிவித்தனர். அரசு இதனை சாதாரணமாக விட்டுவிடாமல் தகுந்த நடவடிக்கை எடுத்து இது போன்ற கலாச்சார சீரழிவு கலை நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ai as the future