தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி - பொன்னார்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி - பொன்னார்
X

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாகர்கோவில் எஸ்எல்வி மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!