கன்னியாகுமரியில் பொங்கல் சிறப்பு சந்தை - விற்பனை அமோகம்

கன்னியாகுமரியில் பொங்கல் சிறப்பு சந்தை - விற்பனை அமோகம்
X

நாகர்கோவிலில் இன்று பொங்கல் சிறப்பு வாழைத்தார் சந்தையில், ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் வாழை குலைகளை வாங்கி சென்றனர்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு சந்தைகளில் விற்பனை களைகட்டியது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இன்று போகிப் பண்டிக்கை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று பொங்கல் சிறப்பு வாழைத்தார் சந்தை கூடியது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வந்து ஆர்வத்துடன் வாழை குலைகளை வாங்கி சென்றனர்.

கொரோனா காலம் என்பதால், பொங்கல் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று பழவகைகள், பூக்கள், காய்கறிகள், பனை ஓலைகள் என நாகர்கோகவில் முழுவதும் அனைத்து சந்தைகளிலும் விற்பனை களைகட்டியுள்ளது.

Tags

Next Story