குமரியில் பாக்கெட் கேமராவுடன் காவலர் ரோந்து பணி துவக்கம்
அதி நவீன பாக்கெட் கேமராவுடன் கூடிய போலீசாரின் ரோந்து பணி
கன்னியாகுமரி மாவட்டதில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தான் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர் நடவடிக்கையாக இன்று மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், உடனுக்குடன் குற்ற சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை செய்யவும் மாவட்டம் முழுவதும் 92 ரோந்து வாகன சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகனங்கள் மற்றும் உடலில் கேமரா பொருந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களுடன் கூடிய ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது இந்த ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரம் செயல்படும் என்றும், பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கவும், குற்ற சம்பவங்கள் பற்றிய தகவல் சேகரிப்பதற்கும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கும், குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற பகுதிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
ரோந்து பணியில் உள்ள காவலர்கள் உடையில் கேமரா பொருத்தபட்டு உள்ளதால் ஏதேனும் குற்ற சம்பவ இடத்திற்கு ரோந்து செல்லும்போது சம்பவ இடத்தின் உண்மையான நிலவரம், பற்றி உயரதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu