அறுசுவை விருந்துடன் மகளிர் காவலர்களை பாராட்டிய போலீசார்

அறுசுவை விருந்துடன் மகளிர் காவலர்களை பாராட்டிய போலீசார்
X

நாடு முழுவதும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல்நிலையத்தில் பணி புரியும் மகளிர் போலீசாருக்கு சக காவலர்கள் இணைந்து மதிய விருந்து வைத்து கவுரவப்படுத்தினர்.

முன்னதாக கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய மகளிர் காவலர்களுக்கு, பூச்செண்டுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த சக போலீசார் பெண்மையை போற்றும் விதமாக மகளிர் போலீசாரை அமர வைத்து அவர்களுக்கு அறுசுவை உணவை பரிமாறினர். சுசீந்திரம் காவல் நிலைய போலீசாரின் இந்த செயல் பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!