தடையை மீறினால் கடும் நடவடிக்கை : குமரி காவல்துறை எச்சரிக்கை

தடையை மீறினால் கடும் நடவடிக்கை : குமரி காவல்துறை எச்சரிக்கை
X
குமரியில் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2022 ஆம் புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி இன்று முதல் 3 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பார்வையிடவும் தடை விதித்து உள்ள மாவட்ட நிர்வாகம் பொது இடங்களில் புத்தாண்டை கொண்டாடவும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறும் போது மாவட்டம் முழுவதும் ஏற்கனவே இருக்கும் சோதனை சாவடிகளுடன் மேலும் 50 தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு 1500 போலீசார் மூலம் சோதனை தீவிரப்படுத்தப்படும். பைக் ரேஸிங் உள்ளிட்ட செயல்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர், குழுக்களாக ஒலி எழுப்பியபடி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பாமல் வீட்டில் இருக்க வைத்து குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரிய நட்சத்திர விடுதிகள் முதல் சிறிய விடுதிகள் வரை அனைவருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!