பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
X

பைல் படம்

பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாராயணன் தலைமையில் போலீசார் இடலாக்குடி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து 5 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(56), ஷேக் முகமது நஷீர்(43), சித்திக்(59), ராஜேந்திரன்(49) மற்றும் சையது இப்ராகிம்(58) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் சூதாடிய கார்டு மற்றும் சூதாடிய 250/- ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!