Police Arrest Accused அம்பர் கிரீஸ் காரில் கடத்திய நான்கு பேர் கைது:போலீசார் விசாரணை

Police Arrest Accused  அம்பர் கிரீஸ் காரில் கடத்திய   நான்கு பேர் கைது:போலீசார் விசாரணை
X

அதிக மதிப்புள்ள அம்பர் கிரீஸ் கடத்தி வரப்பட்ட கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட க்ரீஸ்.

Police Arrest Accused ரூ.10 கோடி மதிப்பிலான அம்பர் கிரீசை கடத்திய 4 பேரை வனத்துறையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர். .

Police Arrest Accused

அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை சிலர் கடத்தி கொண்டு சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் அம்பர் கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் கடத்தி கொண்டு வருவதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பலை வனத்துறையினர் பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது அவர்களது காரில் அம்பர் கிரிஸ் கடத்தியது தெரியவந்தது. காரில் இருந்த 11 கிலோ அம்பர் கிரிசை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நாராயணன்(வயது41), மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(53), வேலாயுதம்(47), நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் (25) என்பது தெரியவந்தது.நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு அம்பர் கிரிசை விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். அது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.இதில் தொடர்புடைய நாகர்கோவில் சேர்ந்த நபரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரிசின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!