எஸ்.பி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில்  கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது

நாகர்கோவிலில் காவல்துறை எஸ்.பி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் , காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். எப்போது கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story