ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி வழங்கக்கோரிக்கை

ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி வழங்கக்கோரிக்கை
X

நாகர்கோவிலில்  மாற்றுத் திறனாளிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி உள்ள இரயில் போக்குவரத்து மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இரயில் பயணத்தில் பொது பெட்டியுடன் மகளிருக்கு தனியாக பெட்டிகள் இருப்பது போன்று மாற்று திறனாளிகளுக்கு தனிப் பெட்டி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனை அறிந்து ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் வகையில், சிறப்பு பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாகர்கோவிலில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனை வலியுறுத்தி வரும் ஜனவரி பத்தாம் தேதி, சென்னை தென்னக பொது மேலாளர் அலுவலகம் மற்றும் சேலம், மதுரை, கோட்ட அலுவலகங்கள் முற்றுகையிட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!