தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
X

நாகர்கோவிலில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நாகர்கோவிலில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

இந்த புகைப்பட கண்காட்சியில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டம், கொரோனா நோய்க்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

Tags

Next Story
ai and the future work ppts