மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -தளவாய் சுந்தரம்

மக்கள் பிரச்சனைகளை தீர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் -தளவாய் சுந்தரம்
X
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது, மேலும் காட்டாற்று வெள்ளத்தில் நெல் பயிர்கள் அழுகின.

வாழை விவசாயம், ரப்பர் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்தது, இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர், கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ள மலை கிராமங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி தொகுதியில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பிரச்சனை குறித்தும் பிரச்சனைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டும் கோரிக்கை மனு அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!