மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகள்: அபராதம் விதித்து போலீசார் அறிவுரை

மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகள்: அபராதம் விதித்து போலீசார் அறிவுரை
X

நாகர்கோவிலில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு பாேலீசார் அபராதம் விதித்து மாஸ்க் வழங்கினர்.

குமரியில் திருமணத்திற்கு வந்து மாஸ்க் அணியாமல் மாஸ் காட்டிய பயணிகளுக்கு அபராதம் விதித்த போலீசார் அறிவுரை வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் குமரி மாவட்டம் வந்த நிலையில் அந்த வாகனங்கள் நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் வாகனங்களில் வந்தவர்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் சம்பவ இடம் வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ததோடு வாகனத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதித்து மாஸ்க் வழங்கினர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு