குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பாெதுமக்கள் ஆட்சியரிடம் மனு

குமரியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பாெதுமக்கள் ஆட்சியரிடம் மனு
X

குமரி முளகுமூடு பகுதியில் செல்போன் டவரால் எங்கள் ஊர் சுடுகாடாக ஆவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குமரியில் செல்போன் டவரால் எங்கள் ஊர் சுடுகாடாக ஆவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் ரேடியேஷன் காரணமாக பல குடும்பங்களில் உள்ள 20 வயதுக்கு குறைவானவர்கள் கேன்சர் நோய்க்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு செல்போன் டவரை அகற்ற கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் கூடுதலாக செல்போன் டவர் அமைக்கும் முயற்சியில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தங்கள் ஊரை சுடுகாடாக மாற்றிவிடும் எனவும், செல்போன் டவர் அமைப்பதை தடுத்து பொது மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!