தடுப்பூசி செலுத்துவதில் புதிய அணுகுமுறை: மக்கள் மத்தியில் வரவேற்பு

தடுப்பூசி செலுத்துவதில் புதிய அணுகுமுறை: மக்கள் மத்தியில் வரவேற்பு
X

பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறையினர்.

குமரி மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படுத்தி உள்ள புதிய அணுகுமுறை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பரிசு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் மெகா தடுப்பூசி முகாம்கள், கிராமங்கள்தோறும் தடுப்பூசி முகாம்கள், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் என பல்வேறு முகாம்களை அமைத்து பொது மக்களை நேரடியாக சந்தித்து தடுப்புசி செலுத்தும் பணியையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி பல்வேறு அணுகு முறைகளை கையாண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக மக்களை நேரடியாக சந்தித்து தடுப்பூசி செலுத்தும் முறையை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.

இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இன்றைய தினம் 12 வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதனை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், மேலும் மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று போடப்பட்டது.

அதுபோல் தடுப்பூசி செலுத்தாமல் பேருந்தில் பயணம் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தருபவர்கள் என அனைவருக்கும் இன்றைய தினம் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!