/* */

நாகர்கோவில் முக்கடல் அணை குழாய் சீரமைப்பு பணிகள் - மேயர் ஆய்வு

குமரியில் பழுதடைந்த முக்கடல் அணை குழாய் சீரமைப்பு பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் முக்கடல் அணை குழாய் சீரமைப்பு பணிகள் - மேயர் ஆய்வு
X

முக்கடல் அணை பணியை நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக முக்கடல் அணையில் இருந்து குழாய்கள் மூலமாக கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்த தண்ணீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே அடுத்த 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்ற நிலையில் மேற்படி பணிகளை விரைந்து முடித்து குடிநீர் விநியோகத்தை சீராக்க மேயர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸ் லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முக்கடல் அணை பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்கா மற்றும் கலை அரங்கங்களையும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 18 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  3. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  4. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  5. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  6. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  7. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  8. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  9. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!