நாகர்கோவில் மாநகராட்சி: 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய்க்கு விற்பனை

நாகர்கோவில் மாநகராட்சி:  5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய்க்கு விற்பனை
X

நாகர்கோவிலில் இயற்கை உரம் விற்பனையை  அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் உரம் விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நுண் உர செயலாக்க மையங்கள் மூலமாக வீட்டு தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் 5 கிலோ 10 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீங்கு இல்லா இயற்கை உரம் விற்பனையை தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த நிலையில் தற்போது மாநகராட்சி அலுவலகம் மூலமாக உரம் விற்பனை நடைபெற்று வருகிறது.

இயற்கை தயாரிப்பு என்பதோடு உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் விற்பனை செய்யப்படும் இந்த இயற்கை உரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!