நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்
X

தமிழக அரசின் உத்தரவின் படி தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருளான காய்கறிகள் பழங்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

அதன் படி நாகர்கோவில் மாநகராட்சியில் 67 வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யபடுகிறது, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய்க்கான காய்கறி தொகுப்பை எளிதில் பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!