பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற மாநகராட்சியின் சிறப்பு முகாம்கள்

பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற மாநகராட்சியின் சிறப்பு முகாம்கள்
X

நாகர்கோவிலில் காய்ச்சல் பரிசோதனை முகாம் ( பைல் படம்)

நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டதன் அடிப்படையில் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக குறைந்தது.

தற்போது உள்ள நிலவரப்படி குமரியில் 210 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பிலும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இது வரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட வில்லை.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தேடி வரும் நிலையை மாற்றி மக்களை தேடி சென்று மாநகராட்சி நிர்வாகம் பரிசோதனை மேற்கொண்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா