சூப்பர் மார்க்கெட் டூ வீடு -மக்களை கவரும் மாநகராட்சி

சூப்பர் மார்க்கெட் டூ வீடு -மக்களை கவரும் மாநகராட்சி
X
மக்களை தேடி மளிகை பொருட்கள் என்ற திட்டம் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி மாநகர் முழுவதும் 186 வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்றவை பொதுமக்களின் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மளிகை பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்ய 23 சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

மேலும் குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டும் பொருட்களை விநியோகம் செய்ய 51 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்