நாகர்கோவில்: வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

நாகர்கோவில்: வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
X
வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை நாகர்கோவில் மாநகராட்சி நடத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் இன்று நெசவாளர்காலனி பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் வீடு, வீடாக சென்று சுகாதாரம் மேற்கொள்வது குறித்தும், தூய்மைபடுத்தும் பணி குறித்து விளக்கியும், தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்கும்படியும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு பணியில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்