நாகர்கோவில் தனியார் நிறுவன ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

நாகர்கோவில் தனியார் நிறுவன ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா
X
நாகர்கோவில் தனியார் நிறுவன ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் மேற்பார்வையில் தனியார் நிறுவன அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தனியார் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிவதோடு தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
ai marketing future