நாகர்கோவிலில் சாலை மேம்பாட்டு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில்  சாலை மேம்பாட்டு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

நாகர் கோவிலில் சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர்அரவிந்த் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மூலதன மானியம் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முல் ஸ்காட் பள்ளி வரையிலான சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை அமைத்து சென்டர் மீடியனில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நடைபெற்று வரும் பணிகளை இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் கலந்து கொண்டார். மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil