கொரோனா விதிகளுக்கு உட்பட்டு நடந்த நாகராஜா கோவில் தேரோட்டம்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலுக்கு, அப்பெயர் வர காரணமாக அமைந்தது, சுமார் 2500 ஆண்டுகள் பழமையும் பிரசித்தியும் பெற்ற, உலகில் நாகருக்கு என தனி சன்னதியுடன் அமைக்கப்பட்ட முதல் கோவிலாக உள்ள நாகராஜா கோவில் ஆகும். இங்கு, தை பெரும் திருவிழா கடந்த 10 ஆம் தேதி ஆகம விதிகளின் படி நடைபெற்ற பூஜைகளுக்கு, பின்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்த தமிழக அரசு, தேர் திருவிழாவை நிறுத்தியது. ஆனால் தொடக்கத்திலேயே திருவிழாவை நிறுத்தி இருக்க வேண்டும், பாதியில் திருவிழாவை நிறுத்தினால் அது மக்களுக்கு பாதிப்பை கொடுக்கும் என கூறி அரசின் முடிவிற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்து இயக்கத்தினர் மற்றும் பக்தர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர் திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், இன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு பூஜைகளுக்கு பின்னர், வாகனத்தில் எடுத்து வரப்பட்ட சுவாமி சிலைகள் திருதேரில் அமர்த்தப்பட்ட நிலையில், பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu