மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு

மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி: மூதாட்டி குற்றச்சாட்டு
X

பேரக்குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்த பாட்டி. 

குமரியில் மகளை கொலை செய்ததோடு வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் மருமகன் மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவருடைய மனைவி உமா. இந்நிலையில் உமா மீது சந்தேக பார்வை கொண்ட ரமேஷ், உமாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரமேஷ் தற்போது சிறையில் உள்ளார். இதனையடுத்து, இவரது வீட்டை நண்பர்கள் மூலமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ரமேஷ்- உமா தம்பதியரின் மகன் மற்றும் மகளின் எதிர்காலம் கருதி வீட்டை விற்பனை செய்ய முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி உமாவின் தாயான மூதாட்டி தனது பேர குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்திலும் வீட்டை விற்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!