நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி காேரிக்கை

நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி காேரிக்கை
X

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களை எம்பி விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாகர்கோவில் மாநகராட்சி சாலைகளை சீரமைக்க எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு பணிகள் முடிவு பெற்ற சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் பெரும் விபத்துக்கள், ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு சாலைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பழுதான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இன்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அப்போது பழுதான சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளாக முடிவு பெறாமல் நடைபெற்று வர் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

Tags

Next Story
ai marketing future