குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் அவதியுறும்  வாகன ஓட்டிகள்
X

நாகர்கோவிலில் சேதமடைந்துள்ள சாலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகவும் P.W.D சாலை உள்ளது

24 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு சில இடங்களில் புதைகுழி போன்றும் காட்சியளிப்பதால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் விபத்துகளும் அதிகரிப்பதால் சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!