/* */

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மினி பேருந்து: தக்க பதிலடி கொடுத்த பொதுமக்கள்

குமரியில் தவறு செய்து விட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுனருக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

HIGHLIGHTS

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மினி பேருந்து: தக்க பதிலடி கொடுத்த பொதுமக்கள்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியான செட்டிக்குளம் பகுதியில் அதிக டிக்கட் வசூளுக்காக அதி வேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்றுகொண்டு இருந்த அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றது.

அபோது எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது, இந்நிலையில் தான் செய்த தவறை மறந்து அரசு பேருந்தை செல்ல விடாமல் தடுத்த மினி பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தின் குறுக்கே மினி பேருந்தை நிறுத்தினார்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனிடையே சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த பொதுமக்களில் ஒருவர் தான் செய்த தவறை மறந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மினி பேருந்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது சொகுசு காரை மினி பேருந்தின் முன்னாள் நிறுத்தினார்.

இச்சம்பவத்தில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

Updated On: 27 Oct 2021 2:00 PM GMT

Related News