குமரியில் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாட்டம்
கன்னியாகுமரியில் உருவ படம் மலர்களால் அலங்கரித்து எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க. நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன்படி நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ திருவுருவ சிலைக்கும், தோவாளை பகுதியில் 100 கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கும் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் கூடிய அ.தி.மு.க.வினர் மலர் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதே போன்று கடுக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதே போன்று தக்கலை, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu