நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு

நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு
X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மேயர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவ துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

நாகர்கோவில் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமினை வணக்கத்துக்குரிய மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார், மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா