நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்
வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட மேயர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சரக்கல்விளை, வெட்டூர்ணிமடம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் மகேஷ் கூறும் போது முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த ஓராண்டில் எண்ணிலடங்காத திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி இருக்கிறார். குறிப்பாக பெண்கள், மாணவர்கள் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் 51 கோடி ரூபாய்க்கும் மேலான திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
இது தவிர பாதாள சாக்கடை மற்றும் புத்தன்அணை குடிநீர் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும், அதன் காரணமாகவே இந்த பணிகளில் தாமதம் ஏற்பட்டது என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu