அனுமதி இன்றி திருமணம் -அபராதம் விதித்த மாநகராட்சி

அனுமதி இன்றி திருமணம் -அபராதம் விதித்த மாநகராட்சி
X
நாகர்கோவில் மாநகர மக்கள் பொறுப்புணர்வோடு திருமண நிகழ்வுகளில் அதிகப்படியான நபர்கள் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது

தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று குறைந்தாலும் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.விதிமுறைகளில் ஒன்றாக குமரி மாவட்டத்தில் திருமண நிகழ்வுகளை மேற்கொள்வோர் கோட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று 30 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறும் திருமண வீட்டாருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பல்வேறு திருமணங்கள் நடைபெறுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதன்படி திருமணம் நடைபெறும் வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று பார்த்தபோது சமூக இடைவெளி இன்றி நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கிங்ஸ்ட்டால் தலைமையில் அதிகாரிகள் வழிகாட்டு நெறி முறையை பின்பற்ற திருமண வீட்டார்களுக்கு ரூபாய் 20,000 வரை அபராதம் விதித்தனர். நாகர்கோவில் மாநகர மக்கள் தங்களின் பொறுப்புணர்வு உணர்ந்து திருமண நிகழ்வுகளில் அதிகப்படியான நபர்கள் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் கீழ்கண்ட மெயில் rdongl.marriage.covid19@gmail.com மூலமாக கோட்டாட்சியரின் அனுமதி பெற்று திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளவும் விதிமுறைகளை பின்பற்றவும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!