100 % வாக்குபதிவை வலியுறுத்தி மராத்தான் போட்டி

100 % வாக்குபதிவை வலியுறுத்தி மராத்தான் போட்டி
X

நாகர்கோவிலில் 100 சதவீதம் வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறை ஆகியவை இணைந்து நாகர்கோவிலில் 100 சதவீத வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்பம் மற்றும் மினி மராத்தான் போட்டிகள் நடைபெற்றது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி வேப்பமூடு ,செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம், வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

கையொப்பம் மற்றும் மினி மராத்தான் போட்டியை சப் கலெக்டர் (பயிற்சி) ரிசப் , சரவணன், மாவட்ட திட்ட இயக்குனர் மைக்கேல் ஆன்றணி பெர்னாண்டோ மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் அண்ணா விளையாட்டு அரங்க நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future