குமரியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ஓடிய மாரத்தான் ஓட்டம்

குமரியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ஓடிய மாரத்தான் ஓட்டம்
X
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ஓடிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

75 வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் மத்திய மாநில அரசுகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து தொடர் மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.

இதனை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாணவர்களுடன் 5 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினார்.

அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன்பு துவங்கிய ஓட்டத்தில் 100 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், கலந்து கொண்டு வேப்பமூடு, செட்டிகுளம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தனர்.

இதில் உடல் ஆரோக்கியம், கட்டுக்கோப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்