மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் நடத்துவதா? அண்ணாமலை கண்டனம்
நாகர்கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆன கலந்தாலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை வேண்டும், மத்திய அரசு 106 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மாநில அரசு 5 ஏக்கர் இடம் ஒதுக்காததால் மருத்துவமனை அமையவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு பேருதவியாக அமையும் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைய மாநில அரசு உடனடியாக நிலம் ஒதுக்க வேண்டும். நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறு திறக்க கூடாது என அரசு கூறுகிறது. இந்தியா முழுவதும் இருந்து வரும் பொதுமக்கள் புனித நீராடும் தீர்த்த கிணறு மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி 600 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இன்று அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பாரை திறக்க கங்கணம் கட்டி வேலை செய்யும் தமிழக அரசு ஏன் ராமேஸ்வரம் கோவில் தீர்த்த கிணறை திறக்க கூடாது என கூறுகிறது.
நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும், தடுப்பூசி முழுமையாக போடாத நிலையில் குழந்தைகள் பேருந்துகளில் செல்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும்.
மாகாணங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஐ எல்லா மாநிலங்களும் கொண்டாடும் நிலையில் தமிழகத்தில் மட்டும் புதிதாக ஜூலை 18 தமிழ்நாடு நாள் என அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன, இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.
கடந்த வருடம் கொடுக்கப்பட்ட 7.5 சதவிகித ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.இப்போது உள்ள மாநில அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது வேதனைக்குரிய செயல்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர் சேர்க்கையை தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது, எய்ம்ஸ் ஐ வைத்து அரசியல் செய்யக்கூடாது.
மத்திய அரசு கொடுத்தாலும் அதனை மாநில அரசு வேண்டாம் என கூறுவது ஏன், இந்தியாவில் 2000 வருடங்கள் பாரம்பரிய பண்டிகையில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய கூடாது.
8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அனைவரும் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும், தமிழகத்தில் தி.மு.க. அரசு கங்கணம் கட்டிக்கொண்டு பா.ஜ.க. தலைவர்களை கைது செய்கிறது.
பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பெண்களை தி.மு.க. நிர்வாகிகளை தரகுறைவாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை.
இது குறித்து தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu