அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச்-4 ல் குமரிக்கு உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச்-4 ல் குமரிக்கு உள்ளூர் விடுமுறை

மாவட்ட ஆட்சியர் அரவிந்த்

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அய்யா வைகுண்டர் அவதார தினம், வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் தமிழகம், கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் அய்யாவழி மக்கள், கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருவது வழக்கம்.

முன்னதாக அன்றைய நாளில், நாகர்கோவிலில் இருந்து பல ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் முத்துக்குடை பவனி மற்றும் அய்யா வாகன பவனியுடன் பாதயாதிரையாக சுவாமி தோப்பு சென்று வழிபடுவார்கள்.

இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 26 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும், என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தகவல் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story