உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் நிறைவு பெற்றது அதிமுகவின் விருப்ப மனு

உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் நிறைவு பெற்றது அதிமுகவின் விருப்ப மனு
X
உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து குமரியில் நடைபெற்று வந்த அதிமுகவின் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வழங்கும் பணி கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விருப்பமனு வினியோகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கடைசி நாளான இன்று மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால் ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள், இளம் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது, சில நாட்களில் விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்